நிமிஷா சஜயன் படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
.கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சமூக, அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.