ரூ.100 கோடி வசூல் படம் மூலம் கம் பேக் கொடுத்த ரவி தேஜா

ரூ.100 கோடி வசூல் படம் மூலம் கம் பேக் கொடுத்த ரவி தேஜா
இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் “இருமுடி”.தமிழில் “இருமுடி கட்டு” என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு இந்தப் படம் சாதனை வெற்றி பெற்று வசூலைக் கொடுத்துள்ளது. மூன்றே நாட்களில் இப்படம் 80 கோடி வசூலைப் பெற்றுள்ளது. வேறு எந்த ஒரு பிராந்திய திரைப்படமும் இப்படி ஒரு வசூலைப் பெற்றதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.பண்டிகை நாட்களில் வெளியாகாமல், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தாமல் சாதாரண டிக்கெட் கட்டணத்திலே யே இந்த வசூல் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது இப்படம் 100 கோடி வசூலைக் எட்டி உள்ளது.

Comments (0)
Add Comment