ரவி மோகனின் கராத்தே பாபு ஃபர்ஸ்ட் சிங்கிள்
நடிகர் ரவி மோகன் தற்போது கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின் மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரித்து ள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளிலான ராசாத்தி ராசா என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் வடசென்னை அரசியல் களத்தில் முக்கிய புள்ளியாக விளங்கும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் கதையாக கூறப்படுகிறது.