இயக்கும் அவதாரம் எடுத்த ரவி மோகன்

இயக்கும் அவதாரம் எடுத்த ரவி மோகன்
ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 2 புதிய படங்களின் பூஜை நடந்தது. இதில் ஒரு படத்தை நடிகர் ரவி மோகன் இயக்குகிறார். அதில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கிறார். மற்றொரு படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். அதில் ஹீரோவாக ரவி மோகன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த விழாவில் பாடகி கெனிஷா, நடிகைகள் ஜெனிலியா, ஷரத்தா ஸ்ரீநாத், நடிகர்கள் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன்,கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, அதர்வா, மாளவிகா மனோஜ், டைரக்டர்கள் சுதா கொங்கரா, அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment