ரவி தேஜாவின் இருமுடி படம் 21ல் ரிலீஸ்
ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இருமுடி’. இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இதில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க, சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லக்ஷ்மண், ராஜ்குமார் கசிரெட்டி, ரமண பார்கவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நேற்று வெளியானது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக ரவி தேஜா நடித்துள்ளார். குடும்ப உணர்வுகள், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் வரும் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.