25 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரவீனா டாண்டன்

25 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரவீனா டாண்டன்
பாலிவுட் திரையுலகத்தில் 90களின் துவக்கத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். 1991ல் வெளிவந்த “பட்ஹர் கே பூல்” என்ற படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 2001ல் வெளிவந்த “டமான்” படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றவர்.1994ல் அர்ஜுன் நாயகனகா நடித்து வெளிவந்த “சாது” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு 2001ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “ஆளவந்தான்” படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இந்த நிலையில் 25 வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment