சாய் அபயங்கர், பாக்யஸ்ரீ போர்ஸ் காம்போவில் வெளியான ரதிமா பாடல்

சாய் அபயங்கர், பாக்யஸ்ரீ போர்ஸ் காம்போவில் வெளியான ரதிமா பாடல்
தனியிசைப் பாடல்கள் மூலம் இசையமைப் பாளராக அறிமுகமானவர் சாய் அபயங்கர். இவரது முதல் பாடலான ’கட்சி சேர’ மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, ட்யூட் படம் மூலம் தமிழில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து 10 முக்கியமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.சில மாதங்களுக்கு முன் வெளியான கருப்பு திரைப்படத்தில் இவரின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதே சமயம் வெளியான இவரது ‘பவழ மல்லி’ பாடலும் பெரியளவில் ஹிட் ஆனது. அதில், இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார்.இந்த நிலையில், சாய் அபயங்கரின் 6-வது தனியிசைப் பாடலான ’ரதிமா’ வெளியாகியுள்ளது. இதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை ஆட வைத்துள்ளார். ரதிமா பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். தேஜே பரஜ்வாஜ் இயக்கியுள்ளார்.

Comments (0)
Add Comment