ராஷ்மிகாவின் அடுத்த பட அப்டேட்

ராஷ்மிகாவின் அடுத்த பட அப்டேட்
நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன் ஃபார்முலா பிலிம்ஸ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க உள்ள ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் ரஷ்மிகா நடிக்கிறார். நேற்று வெளியான இதன் அறிவிப்பு போஸ்டரில் ராஷ்மிகா ஒரு வாளை கையில் ஏந்திய படி இருக்கிறார்.

இந்த படம் குறித்து ராஷ்மிகா கூறியது,
“நாங்கள் எந்த மாதிரி வேலை செய்திருக் கோம் என்பதை உங்களுக்குக் காட்டும் நேரம் வந்தாச்சு! இது வரைக்கும் நீங்க பார்த்திருக்காத ஒரு புதிய ராஷ்மிகாவை, இதில் பார்க்கலாம். நானும் ரொம்பவே எக்ஸைட்டடா இருக்கேன்” என்றார். இந்த படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள், தலைப்பு, ஃபர்ஸ்ட் ஆகியவை இன்றைய தினம் வெளியாகவுள்ளன.இந்த படத்தின் மூலம், ராஷ்மிகா முழு நீள நாயகியாக திரை எல்லைகளை கடந்து பயணிக்கவுள்ளார்.

Comments (0)
Add Comment