ராவ் பகதூர் -விமர்சனம்
அரச குடும்ப வாரிசான சத்யதேவ் தனது அரண்மனையில் தீராத நோயுடன் வாழ்ந்து வருகிறார்.பல ஆண்டுகளாக மனைவி அவரிடம் பேசாமல் இருப்பதற்கான காரண மும், அவரை வாட்டும் ஒரு சந்தேகத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையும் என்ன என்பதே படத்தின் மீதி கதை. ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவை அரச குடும்ப பின்னணியில் மெதுவாக நகர்த்தி உள்ளார் இயக்குநர் வெங்கடேஷ் மஹா. முதல் பாதி சற்று நீளமாக இருந்தாலும், பிளாஷ்பேக் மற்றும் 2-ம் பாதியை விறுவிறுப்பாக நடத்தியுள்ளார். ராமப்பா ராவ் பகதூராக சத்யதேவ் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். தீபா, விகாஸ் முப்பாலா, பாலா பரசர் ஆகியோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து சரியாக நடித்துள்ளனர். கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு, சமரன் சாயின் இசை படத்திற்கு பலம்.