ரணபலி, ஜெயம்மா லுக்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

ரணபலி, ஜெயம்மா லுக்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
சங்கிரித்யன் ராகுல் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் பீரியட் ஆக்‌ஷன் டிராமா படமான ‘ரணபலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ கடந்த 28ம் தேதி வெளியானது. 19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம் செப்டம்பர் 11அன்று வெளியாக உள்ளது. இதில் தேவரகொண்டா ‘ரணபலி’ யாகவும், ராஷ்மிகா மந்தனா ‘ஜெயம்மா’ வாகவும் நடிக்கின்றனர். 1854-1878 காலகட்டத்தில் நடக்கும் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான அதிரடிப் படமான இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, அஜய்-அதுல் பிணைந்து இசை அமைக்கின்றனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணத்தை முன்னிட்டு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Comments (0)
Add Comment