அட்லீ, பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுக மாகி தற்போது பாலிவுட் திரை உலகில் பிரபலஇயக்குனராக இருக்கும் அட்லீ, பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்ளுக்கு ஏற்கனவே ‘மீர்’ என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அட்லீ மனைவி பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பாலிவுட் திரை பிரபலங்களுடன் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார்.இந்நிலையில் அட்லீ- பிரியா தம்பதிகளுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை மகிழ்ச்சியோடு அட்லீ வெளியிட்டுள்ளார்.