நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பேசியது,திருச்சி தொகுதி மக்களுக்கு ஸ்பெசல் நன்றிகளும், வணக்கங்களும்.ஆறுமாசம் அமைதியாக இருப்போம்னு சொன்னவங்க ஆறுநாள் கூட அமைதியாக இருக்க மாட்டேங்கிறாங்க.எங்களுக்கு ஆதரவு தெரிவிச்ச அத்தணை இயக்கங்களுக்கும் நன்றி.எம்.ஜி ஆரோடு என்னை ஒப்பிடாதீர்கள். எம்.ஜி.ஆர், எம்.ஜி. ஆர் தான். இன்னும் கொஞ்ச சப்போர்ட்டை எதிர்பார்த்தேன். பரவாயில்லை வருங்காலங்களில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள்.என்னை கிண்டல் செய்பவர்கள் தான் எனக்கு எனர்ஜி.இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. ஒன்னு திமுக, இன்னொன்று டிவிகே. மற்றும் பலருக்கு இதில் இடமில்லை. எந்த அல்லு சில்லுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்காது. நம்ம ஆட்சிக்கு வந்ததுக்குப்பிறகு, சட்டசபையை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கு. தற்குறி என சொன்னீங்களே, அவுங்க தான் உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவங்க. எங்களுக்கு ஓட்டு போட்டா தற்குறியா. மக்களை தப்புதப்பா பேசினா, இந்த விஜய் கேள்வி கேட்பான். இனி பழைய டெக்னிக் எல்லாம் எடுபடாது. மக்கள் தெளிவாயிட்டாங்க. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியா செயல்படுங்கள்.என்னையும், மக்களையும் பிரிக்க முடியாது. பொய் சொல்லி ஆட்சிக்கு நான் வரவில்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தீர்களே .சட்டம் ஒழுங்குகாக நல்ல திறமையான அதிகாரிகளை இந்த அரசு நியமித்து இருக்கிறது. நியமிக்க இருக்கிறது. தீயசக்தி, தீய்ந்து போன சக்தியும் சேர்ந்து திட்டம் போட்டு, ஆட்சியமைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள். 60 வருச சாதி, மதம், காசு கொடுப்பதை உடைத்து இருக்கிறோம். எல்லாருக்குமான ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கும். திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி. வரப்போகிற இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள். என் பணி கடன் செய்து கிடைப்பதே. லஞ்ச லாவண்ய ஊழல் இல்லாத ஆட்சியை நிச்சயம் தருவேன்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார்.அப்போது அவர், “6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை” என கூறி அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.இந்த பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன், அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக காவலன்

Comments (0)
Add Comment