ஜமா பட இயக்குனருக்கு ஜோடியான ரம்யா ரங்கநாதன்
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தனது 7-வது பட தயாரிப்பை துவக்கி உள்ளது. இதை நியோ கேஸ்டில் கிரியேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா ரீ-என்ட்ரி கொடுக்கிறார். பரத் சங்கர்
இசையமைக்க,ஷெல்லி ஆர் கேலிஸ்ட் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.சென்னை பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கி உள்ளது.