ராமாயணா டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

ராமாயணா டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ராமாயணா. இரண்டு பாகமாக உருவாகும் இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் பிரைம் போகஸ் ஸ்டூடியோ வின் சிஇஓவுமான நமீத் மல்ஹோத்ரா கூறியது, நமது ராமாயாணா படத்துக்கு இன்று சிறப்பான நாள். உலகம் முழுவதும் இந்தப் படத்தை எடுத்துச் செல்லும் எனது கனவு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நிறைவேற உள்ளது . இந்த படத்தின் டிரைலர் மற்றுமொரு நாளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும். 100 ஆண்டுக்கும் மேலான இந்திய சினிமாவில் இது மிகவும் பெருமைமிகு தருணம். பெரிய ஹாலிவுட் படங்கள் போல நமது ராமாயணா படமும் வெளியாகவிருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment