பெத்தி படத்தில் ராம் சரண் நடிப்பு ரங்கஸ்தலத்தை மிஞ்சும்
ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமை ப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் வருமாறு, இயக்குனரிடம் இதன் கதையை கேட்ட பிறகு சுமார் 20 நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் படத்திற்காக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.70 மற்றும் 80களின் பின்னணிக்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக வடிவமைத்துள்ளனர். இதில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்றார்.