ரஜினியின் ‘ஜெயிலர்-2’ காட்சிகள் லீக்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ காட்சிகள் லீக்
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் முழு காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்ததால் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.இதை பகிரவோ, டவுன்லோடு செய்யவோ வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment