ரஜினி 173 படத்தின் ஷூட்டிங் துவங்கியது
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவரின் 173-வது படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஈவிபி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது. இதில் ரஜினியை தவிர மற்ற நடிகர்கள் பங்கேற்கும் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ரஜினி பங்கேற்கும் காட்சியும் எடுக்கப்பட உள்ளது. அவரின் மாஸ் என்ட்ரி அறிமுக பாடல் முதலில் படமாக்கப்பட உள்ளது. அதற்கான ஹேர் ஸ்டைல் மற்றும் உடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ரஜினியும் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.