ரூட் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி

ரூட் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர் சூரிய பிரதாப் எஸ். இவர் தற்போது கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் ‘ரூட்- ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’என்ற தனது முதல் படத்தை இயக்கியிரு க்கிறார். இதில் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, ஒய்.ஜி. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிவியல் , கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Comments (0)
Add Comment