‘ சாருகேசி’ பட ஆடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த்

‘ சாருகேசி’ பட ஆடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த்

ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ என்ற இசை நாடகத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைப்படமாக இயக்கி உள்ளார். இதில் சத்யராஜ்,சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தை அருண் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரிக்க, இ5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே. ஜெய கிருஷ்ணன் ஜூன் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Comments (0)
Add Comment