‘ மிராய்’ பட டிரெய்லரை பார்த்து மிரண்டு போன ரஜினி
ஹனுமான் படத்தை தொடர்ந்து தெலுங்கு இளம் நடிகர் தேஜா சஜ்ஜா அடுத்து மிராய் என்ற படத்தில் நடித்துள்ளார். பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தில் மஞ்சு மனோஜ், ஜெகபதிபாபு,ஜெயராம்,ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.கார்த்திக் கட்டனேனி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் வரும் 12-ந் தேதி பல மொழிகளில் வெளியாகிறது.தமிழகத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் தேஜா சஜ்ஜா பங்கேற்று பேசினார். இந்த நிலையில் ‘மிராய்’ படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினியிடம் நடிகர் மனோஜ் மஞ்சு காண்பித்தார். டிரெய்லரை பார்த்த ரஜினி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.