புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினி

புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினி
ஆங்கில புத்தாண்டை யொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்தனர். ரஜினியை பார்க்க விரும்பி வெளியூரில் இருந்தும் ரசிகர்கள் காத்திருந்தனர். நேற்று காலை 9 மணி அளவில் ரஜினி வெள்ளை வேஷ்டி சட்டையுடன் வெளியே வந்து ரசிகர்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பதிலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.ரஜினி கை கூப்பியபடி, பறக்கும் முத்தங்களை கொடுத்து வாழ்த்துதெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

Comments (0)
Add Comment