ரெடி ஆகுது ரஜினி பயோ பிக்

ரெடி ஆகுது ரஜினி பயோ பிக்
இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வும், தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆகும் இருந்து வரும் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது பயோ பிக் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். அதற்கான கதையையும் அவரே கடந்த சில ஆண்டுகளாகவே எழுதி வருகிறார். தான் பிறந்து வளர்ந்த கர்நாடக மாநிலத்தில் தொடங்கி பேருந்தில் நடத்துனராக வேலை செய்து பின்னர் சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி பல்வேறு ஸ்டுடியோக்களில் அலைந்து திரிந்து நடிகரானது வரை அத்தனை தகவல்களையும் அதில் இடம்பெற செய்துள்ளார்.அவரது வாழ்க்கை வரலாறு கதையை இயக்கம் பொறுப்பை முன்னணி இயக்குனர் ஒருவரிடம் ஒப்படைக்க இருக்கிறார். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)
Add Comment