ரசிகர்களை வியக்க வைத்த ரஜினி

ரசிகர்களை வியக்க வைத்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றனர். விமானத்தில் சாதாரண பயணிகள் செல்லும் இருக்கை யில் அமர்ந்து பயணித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ரஜினி
விமானத்துக்குள் ஏறியவுடன் பயணிகளை பார்த்து கை அசைத்தார். முன்னதாக
விமான நிலையத்துக்கு வந்த ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் பாதுகாப்பு படையினரை தாண்டி சென்று அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். இதைப் பார்த்த ரஜினிஅந்த 2 பெண்களை தன் அருகே அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Comments (0)
Add Comment