ஆட்டோவில் சென்ற ரகுல் பிரீத் சிங்
பிரபல நடிகையான ரகுல் பிரீத்சிங், கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் ஆடம்பர பங்களாவில் வசித்து வரும் அவருக்கு ஏராளமான சொகுசு கார்கள், கோடிக்கணக் கான சொத்துகள் உள்ளது. இருப்பினும் மும்பையில் சாதாரணமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரை ஆட்டோவில் பார்த்த போட்டோகிராபர்கள் துரத்திச் சென்று படம் பிடித்தனர். அந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.