பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்
துபாயில் வேலை செய்யும் இளன், காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஊருக்கு வருகிறார். ஆனால் அப்பா எம்எஸ் பாஸ்கர் அவரது நண்பர் மகளை பெண் பார்க்கச் சொல்லி அனுப்புகிறார். அந்தப் பெண்ணுக்கு பதிலாக சோசியல் மீடியா இன்ப்ளூயன்சரா ன சான்வி மேக்னாவை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிகிறது. அதன் பிறகு தான் அதிர்ச்சியை காத்திருக்கிறது அது என்ன? என்பதுதான் படத்தில் மீதி கதை. காதல் கல்யாணம் கசக்கிறதா, இனிக்கிறதா என்பதை வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து அனுபவித்து திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர் இளன். இயக்கம் மட்டுமின்றி ஒரு நடிகராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நான் சளைத்தவள் இல்லை என சான்வி மேக்னாவும் போட்டி போட்டு நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசமும், ராதிகா சரத்குமார், குமரவேல், செந்தில் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம். யோகி பாபுவின் டைமிங் காமெடி ஓகே. யுவன் சங்கர் ராஜாவின் இசை, தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

Comments (0)
Add Comment