பெண்கள் உடல்நலத்தை பாதுகாப்பது பெரிய சவால்:பிரியா பவானி சங்கர்

பெண்கள் உடல்நலத்தை பாதுகாப்பது பெரிய சவால்:பிரியா பவானி சங்கர்
முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் ‘டிமான்ட்டி காலனி 2’, படம் வெளியானது. அடுத்து அதன் 3ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் ‘கலர்ஸ் 2.0’ வெல்னஸ் சென்டரை ப்ரியா பவானி சங்கர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது, இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெண்கள் உடல் நலத்தை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. அழகு என்பது வெளிப்புற தோற்றத்தில் மட்டும் இல்லை, ஆரோக்கிய மான வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உண்மையான அழகு வெளிப்படும் என்றார். இந்த விழாவில் கலர்ஸ் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா,எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் வெங்கட் சிவாஜி கூனா ஆகியோர் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment