மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்
கன்னட சினிமாவின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு கன்னட படத்தில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம் சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வைசாக்.ஜெ பிலிம்ஸ் தயாரிப்பில், ஹேமந்த் ராவ் இயக்கதில் சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.