திருமண விழாவுக்கு ஜோடியாக வந்த பிரியதர்ஷன் -லிசி
இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் கடந்த1990-ம் ஆண்டு காதலித்து திருமணம்
செய்து கொண்டனர்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும்,சித்தார்த் என்ற மகனும் உள்ளனர்.கல்யாணி பிரியதர்ஷன் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் மலையாள இயக்குனர் சிபிமலயில் மகன் திருமணம் கேரள மாநிலத்தில் நடந்தது. திருமண விழாவில் இயக்குனர் பிரியதர்ஷனும்,லிசியும் ஒன்றாக பங்கேற்றனர்.மணமக்களை இருவரும் ஜோடியாக வாழ்த்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.