ஹிருத்திக் ரோஷனை இயக்கும் பிருத்வி ராஜ்

ஹிருத்திக் ரோஷனை இயக்கும் பிருத்வி ராஜ்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தை கே.ஜி.எப் மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தை மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த இரண்டு படங்களிலும் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்து வருகிறார். இதில்,வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment