அழகு ரகசியம் சொன்ன ப்ரீத்தி முகுந்தன்

அழகு ரகசியம் சொன்ன ப்ரீத்தி முகுந்தன்
மலையாள நடிகையான ப்ரீத்தி முகுந்தன் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிளாஸ்ட் படத்தில் அர்ஜுன், அபிராமி உடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்து நேற்று முன்தினம் வெளியான இதய முரளி படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த அசத்தி இருந்தார். இந்த நிலையில் தனது அழகு ரகசியம் குறித்து அவர் கூறியது, நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம். எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு, நல்ல தூக்கம் மிகவும் அவசியம் என்றார்.

Comments (0)
Add Comment