ஹோம்லி கேரக்டரில் நடிக்க விரும்பும் ப்ரீத்தி அஸ்ராணி

ஹோம்லி கேரக்டரில் நடிக்க விரும்பும் ப்ரீத்தி அஸ்ராணி
ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ 29’. இதில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படம் பற்றி ப்ரீத்தி அஸ்ராணி கூறியது, நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதேபோல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். அது என்ன என்பது தான் கதை.கண்டிப்பாக இந்த லவ் ஸ்டோரியை பார்க்கும் போது ரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இந்தப் படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கை பயணம். எனக்கு எப்போதும் இதை போல் பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புவேன். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும்,அதை திரையில் வெளிப்படு த்துவது கடினம். இது போன்ற சவாலான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

Comments (0)
Add Comment