ரூட்டை மாற்றிய ப்ரீத்தி அஸ்ராணி
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‛அயோத்தி’ படத்தில் வடமாநில பெண்ணாக நடித்தவர் ப்ரீத்தி அஸ்ராணி.
அதன் பிறகு உறியடி விஜயகுமார் நடித்த தேர்தல் படத்திலும் ஹோம்லியாக நடித்து இருந்தார். தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவர், இப்போது கவின் நடிக்கும் ‛கிஸ்’ படத்திலும்,
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கும் ‛கில்லர்’ படத்திலும் மார்டன் வேடத்தில் நடிக்கிறார். அந்த அஸ்ராணியா இது என்று பலரும் கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றம் மாறியுள்ளது.