ஓடிடி தளத்தில் பிரபுதேவா

ஓடிடி தளத்தில் பிரபுதேவா
நடனம், நடிப்பு, இயக்கம் என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபுதேவா, ஓடிடி தளத்தில் முதன்முறையாக தடம் பதித்துள்ளார். சோனி எல்ஐவி தமிழ் ஒரிஜினல் தொடராக உருவாகியுள்ள சேதுராஜன் ஐபிஎஸ் மூலம் அறிமுகமாகிறார். கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த கிரைம் திரில்லர் தொடரில், பிரபுதேவா தன் வழக்கமான கவர்ச்சியை விட்டு விலகி, பலத்த கம்பீரத்துடன், அரசியலுடன் பின்னிப்பிணைந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார். ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும் இந்தத் தொடர் விரைவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

Comments (0)
Add Comment