பூக்கி- விமர்சனம்
காதலர்களான அஜய் தீஷன்,தனுஷா இருவரும் ஈகோ பிரச்னை காரணமாக பிரிகின்றனர்.பின்னர் இருவருக்கும் வேறு காதலுக்கு மூவ் ஆன் ஆகின்றனர்.ஆனாலும், இருவருமே முந்தைய காதலை மறக்க முடியாமல் தவிக்கின்ற னர்.கடைசியில் என்ன முடிவெடுத்தனர் என்பது தான் படத்தின் மீதிகதை.
இன்றைய ஜென் சி மனநிலை, அவர்கள் காதலை பார்க்கும் விதம், செய்யும் தவறுகள், முடிவெடுக்கும் விதம் என பல விஷயங்களை இயக்குனர் கணேஷ் சந்திரா அழகாக திரையில் காட்டியுள்ளார். அதோடு படத்திற்க்கு ஒளிப்பதிவும் செய்து உள்ளார்.தனது மருமகன் அஜய் தீஷனுக்காக இந்த படத்தை தயாரித்து, இசையமைத்து, எடிட் செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.
அஜய் தீஷனின் துறுதுறு நடிப்பு, இயல்பான வசனங்கள்,டான்ஸ்,யூத் ஆடியன்சை கவரும். தனுஷா நடிப்பு கதைக்கு பலம்.சாமியாராக வரும் சுனில் சம்பந்தப்பட்ட காட்சி விறுவிறு. ஜிம்மில் பிரியங்கா வரும் இடங்களும் ஓகே. சிம்புவை வேறுமாதிரி பயன்படுத்தியது ஒட்டவில்லை. மற்றொரு ஹீரோயின் ஷியாரா, விவேக்பிரசன்ன, பாண்டியராஜன், ஸ்ரீராம் ராதா உள்ளிட்ட அனைவருமே அழகாக நடித்துள்ளனர்.முதல் பாதி மைனஸ், எடிட்டிங், இசையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.