பூக்கி படம் சென்சிபிளான லவ் ஸ்டோரியா இருக்கும்: சசி

பூக்கி படம் சென்சிபிளான லவ் ஸ்டோரியா இருக்கும்: சசி
விஜய் ஆண்டனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூக்கி”. இதில் அஜய் திஷான் ஹீரோவாக நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே மார்கன் படத்தில் எதிர்மறை கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஹீரோயின் ஆக தனுஷா நடித்துள்ளார். இப்படம் வரும் 13 ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சசி பேசியது, இந்த படத்தோட ஹீரோ அஜய்யை வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் இயக்கி வருகிறேன்.அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரி யான கேர்கடர்களை மிக அழகாக கையாண் டிருக்கிறார். உண்மையிலேயே அவர் நல்ல திறமைசாலி. நிச்சயம் இப்படம் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் என்றார்.

Comments (0)
Add Comment