6 மில்லியனை தாண்டிய பூஜா ஹெக்டே பாட்டு
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ‛கூலி’.அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ‛சிக்கிட்டு’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஆடியுள்ள ‛மோனிகா’ பாடலை நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். விஷ்ணு எடவன் எழுதி உள்ள இந்த பாடலை சுபலாஷினி மற்றும் அனிருத் பாடி உள்ளனர். துறைமுகம் பின்னணியில் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. அதேசமயம் ‛ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‛காவாலா’ பாடல் ரேஞ்சுக்கு இது அமையவில்லை.