பொங்கல் ரேசில் ஜனநாயகன்- பராசக்தி
ஒரே நாளில் ட்ரெய்லர், இசை வெளியீடு
இன்று மாலை ஜனநாயகன் டிரைலர், பராசக்தி இசை வெளியீடு
சென்னை ஜன:3,
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நாளில் படம் ரிலீஸ் ஆகும் என பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுதா கொங்ரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென அந்த படத்தை முன்கூட்டியே ஜனவரி 10ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டது. இதற்கு காரணம் பராசக்திபடத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகின்றனர். விஜய்யின் அரசியல் எண்ரி காரணமாக திமுக குடும்ப தயாரிப்பு நிறுவனம் இதை திட்டமிட்டு செய்வதாக விஜய் ரசிகர்களும், திரை உலகினரும் கூறி வருகின்றனர். பொங்கல் ரேசில் இந்த இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி இருப்பது உறுதியாகி உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில்
படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் சுமார் 1லட்சம் பேர் பங்கேற்றனர். விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்
படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புராடக்ஷன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.45 மணிக்கு வெளியிடப்படுவ தாக அறிவித்துள்ளது. ஆனால் இன்று மாலை அதே நேரத்தில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. பட ரிலீஸில் மோதிக்கொள்ளும் இந்த இரண்டு படங்களும் தற்போது டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிலும் இருவரும் மோதிக் கொள்கின்றனர். இருப்பினும் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக ஜனநாயன் படத்திற்கு தான் வியாபாரம் மற்றும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பிலும், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிலும் தகவல் தெரிவித்துள்ளனர்.