டிவி நடிகர்களுக்கு பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பரத் தலைமையில், செயலாளர் நவீந்தர், பொருளாளர் கற்பகவல்லி மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையில், சுமார் 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் சின்னத்திரை கலைஞர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.