‘பேய் கதை’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
ஜுன் மோசஸ் இயக்கத்தில், அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசையமைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் வெளியிடுகிறார்.