டாப் ஹீரோவாகும் ரூட் சொன்ன பேரரசு

டாப் ஹீரோவாகும் ரூட் சொன்ன பேரரசு
அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ. பழனி சாமி தயாரிப்பில், சங்கிலி சி.பி.ஏ. இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இதில் முருகா அசோக், யாழினி முருகன், பக்கோடா பாண்டி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய முகேஷ் முனுசாமி இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு பேசியது, ஒரு ஹீரோ கிராமத்துக் கதைகள் கொண்ட படத்தில் நடித்தால் தான் முழுமையான கதாநாயகனாக மாறுவார். எம்.ஜி.ஆருக்கு ஒரு ‘மதுரைவீரன்’, சிவாஜிக்கு ஒரு ‘பட்டிக்காடா பட்டணமா’, ரஜினிக்கு ஒரு ‘முரட்டுக்காளை’, கமலுக்கு ஒரு ‘சகலகலா வல்லவன்’, விஜய்க்கு ஒரு ‘கில்லி’, அஜித்துக்கு ஒரு ‘வீரம்’, சூர்யாவுக்கு ஒரு ‘சிங்கம்’, கார்த்திக்கு ஒரு ‘பருத்திவீரன்’ என்று கிராமத்துக்கதைகளில் நடித்த பிறகு தான் அவர்கள் பெரிய நட்சத்திரம் ஆனார் கள்.உச்சத்துக்குச் சென்றார்கள் என்றார்.

Comments (0)
Add Comment