பருத்தி -விமர்சனம்
கிராமத்தில் வாழ்ந்து வரும் அண்ணன்,தம்பி இருவரில் அண்ணன் ஜாதி வெறி பிடித்தவர் ஆகவும் தம்பி அனைத்து ஜாதியினரும் சமம் என்ற எண்ணத்திலும் இருப்பவர்கள். இதில் அண்ணனின் மகள் வேறு ஜாதி பையனை காதலிக்கிறார். மற்றொருபுறம் சோனியா அகர்வால் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டு விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதற்கு என்ன காரணம்? வேறு ஜாதி பையனை விரும்பும் மகளை அண்ணன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீது கதை.
இதில் அதிக வசனம் பேசாமல், தன் கேரக்டரை பேச வைத்துள்ளார் சோனியா அகர்வால். அண்ணன் தம்பியாக நடித்துள்ள குட்டி புலி சரவணன், நடிப்பு எதார்த்தம். குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கும் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஜாதியை தாங்கிப் பிடிக்கும் மனிதர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் படத்தை
இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.குரு. இருப்பினும் திரைக்கதை மற்றும் காட்சிகள் கை கொடுக்கவில்லை. ரஞ்சித் வாசுேதவன் இசை,ராஜேஷின் ஒளிப்பதிவு
ஓகே ரகம்.