குரு சோமசுந்தரம், அனுமோல் நடிக்கும் பாரிஸ் கஃபே

குரு சோமசுந்தரம், அனுமோல் நடிக்கும் பாரிஸ் கஃபே
தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல் வி என்டர்டெயின்மெனட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள படம் பாரிஸ் கஃபே. இதில் குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க, விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், நயான சாய், சாய் விக்கி, பிபின் ஆகியோர் நடித்துள்ளனர்.கே இசையமைக்க,சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய. தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார்.சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மித்ரன் ஜவகர் பேசும்போது, ஒரு டைரக்டருக்கு மனைவி ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றார்.

Comments (0)
Add Comment