‘ பராசக்தி’க்கு யு/ஏ சான்று : படம் ரிலீஸ்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பராசக்தி’.இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு 10 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் பராசக்தி படத்தை தணிக்கை குழு மறு ஆய்வு கமிட்டி பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது. இதையடுத்து பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி உலகம் முழுவதும் வெளியாகிறது.