ஜனவரி 3ம் தேதி பராசக்தி பட ஆடியோ லான்ச்

ஜனவரி 3ம் தேதி பராசக்தி பட ஆடியோ லான்ச்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி படத்தை வெளியிடுகிறார்.வரும் ஜனவரி 10-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3ஆம் தேதி சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக் குழு திட்டமிட்டுள்ளது

Comments (0)
Add Comment