‘ பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச் சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியானது.இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். டொவினோ தாமஸ் இதில் விஜயராகவன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இதன் கதையை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்ய, வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நௌபல், பிரிஜீஷ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெ ய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சாணக்யா, சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.