அதர்ஸ்-விமர்சனம்

அதர்ஸ்-விமர்சனம்
சென்னையில் இருக்கும் ஒரு செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சினை வருகிறது.அது என்ன பிரச்சனை? ஏன் அந்த குழந்தைகளுக்கு மட்டும் அது ஏன் வருகிறது? என்பது தான் அதர்ஸ் படத்தின் ஆன்லைன் ஸ்டோரி.
செயற்கை கருத்தரிப்பு என்பது மருத்துவ உலகில் இன்று மிக முக்கியமானது என்பதை தாண்டி பணம் பார்க்கும் மணி மாஃபியாவாக வளர்ந்து வருகிறது. அதை மையமாக வைத்து மெடிக்கல் கிரைம் திரில்லர் படமாக இந்த படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் அபின் ஹரிஹரன்.
ஹீரோவாக நடித்துள்ள அறிமுக நடிகர் ஆதித்ய மாதவன், அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கௌரி கிஷன் ஒரு டாக்டராக சிறப்பான நடிப்பை தந்துள்ளார். அதோடு அஞ்சு குரியன், முனீஸ்காந்த், நண்டு ஜெகன், வினோத் சாகர், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் அரவிந்த் சிங் கேமரா ஒர்க் சூப்பர்.

Comments (0)
Add Comment