என்டிஆர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
‘கேஜிஎஃப்’ மற்றும் ‘சலார்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படம் என் டி ஆரின் சினிமா வாழ்க்கையை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படக்குழு அதிரடியான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், என்டிஆர் பிறந்தநாளான மே 20 ஆம் தேதி படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் என்டிஆரின் ஸ்டைலான தோற்றம் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் ஹீரோயினாக ஜான்வி கபூர், ருக்மணி வசந்த் நடிக்கின்றனர்.இந்தப் படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்படுகிறது.