நிவேதா பெத்துராஜ்க்கு கல்யாணம்
நடிகை நிவேதா பெத்துராஜ், நடிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டன், பார்முலா-1 கார் பந்தய போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்து ராஜ், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இது அவர் குறித்து கூறியது, நானும் ராஜித் இப்ரானும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகிறோம்.அவர் சென்னை, துபாயில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். எங்கள் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது.வரும் ஜனவரி மாதம் சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது. விநாயகர் சதுர்த்தி என்பதால் எங்களது திருமண தகவலை அறிவித்தேன். திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றார்.