ரிலீசுக்கு முன்பே “கான் சிட்டி” படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

ரிலீசுக்கு முன்பே “கான் சிட்டி” படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்
அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி”படம்,வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை விற்பனையாக உள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கி உள்ளது. புதுவித பேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி” படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார்.படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்க,அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதி வு செய்துள்ளார்.நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் காமெடி மற்றும் உணர்வுகளை யும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

Comments (0)
Add Comment