வரும் 27ம் இது ரிலீசாகும் நீ ஃபாரவர்

வரும் 27ம் இது ரிலீசாகும் நீ ஃபாரவர்
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் நீ ஃபாரவர்.இதில் ஹீரோவாக,நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நடிக்க, மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற அர்ச்சனா ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசை அமைக்க,ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜென்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் ஆகியோர் தயாரித்துள்ளனர். தருணம் படத்தையடுத்து 2வது தயாரிப்பாக இது உருவாகியுள்ளது. இந்த பட பாடல்களை சரிகமா கைப்பற்றியுள்ளது.ஓடிடி உரிமை யை நெட் பிலிக்ஸ் வாங்கியுள்ளது. வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ள இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Comments (0)
Add Comment